புதிய பொருளாதார தடை – அமெரிக்காவின் பரிந்துரைக்கு வடகொரியா எச்சரிக்கை

470 0

புதிய பொருளாதார தடையினை வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா பரிந்துரை செய்துள்ள நிலையில், அதற்கு வட கொரியா அதிர்ப்தி வெளியிட்டுள்ளதுடன் எச்சரிக்கையினையும் விடுத்துள்ளது.

அமெரிக்காவினால் இந்த பரிந்துரை இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சபை அமெரிக்காவின் பரிந்துரைக்கு ஏற்றவகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவிற்கு எதிராக எரிபொருள் தடை விதிக்கப்படும் பட்சத்தில், வடகொரியாவின் முக்கிய ஏற்றுமதியான புடவைத்தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான தடைகளை மேற்கொள்ள முயற்சிக்கும் அமெரிக்காவிற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் யுன் எச்சரித்துள்ளார்.

வட கொரியா கடந்த 3ஆம் திகதி மேற்கொண்ட சக்திவாய்ந்த ஹயிடரஜன் குண்டு பரிசோதனையினை அடுத்து சர்வதேச ரீதியாக எதிர்ப்புக்கள் வெளியாகின.

இந்த விடயம் தொடர்பாக நேற்றோவின் தலைவர் ஜீன்ஸ் ஸ்ரோல்ட்டன்பேர்க் கருத்து தெரிவிக்கையில், வடகொரியாவின் அசமத்தனமான போக்கு கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளதுடன், சர்வதேச நாடுகள் இணைந்து இதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

 

 

Leave a comment