அரச பணியாளர்களை பாதுகாக்குமாறு ஜேவிபி கோரிக்கை

1922 49
அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளுக்கு துணைநிற்காது செயற்படுகின்ற அரச பணியாளர்களை பாதுகாப்பதற்கு முன்னிற்க வேண்டும் என  ஜேவிபி தெரிவித்துள்ளது.
மஹரகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக செயற்படும் அரச அதிகாரிகள் பெருவாரியாக உள்ளனர்.
அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்காக மக்களே முன்வர வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment