500 விக்கட்டுக்களை பெற்றார் ஜேம்ஸ் அன்டர்சன்

399 0

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெறுகிறது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதனை தொடர்ந்து துடுப்பாடிய இங்கிலாந்து அணி 194 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்தநிலயில், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 500 விக்கட்டுக்கள் என்ற மைல் கல்லை எட்டினார்.

129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 500 விக்கட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 6 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்த பட்டியளில் இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்  முத்தையா முரளிதரன் முதலாம் இடத்தில் உள்ளார்.

அவர் 800 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment