மேற்குவங்க மாநிலம் ‘பங்களா’ ஆகிறது

429 0

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திற்கு ‘பங்களா’  என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

அந்த தீர்மானம், மத்திய அரசின் அனுமிதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கான முதல் தீர்மானம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அதன்படி, ஆங்கிலத்தில் ‘பெங்கால்’, பெங்காலியில் ‘பங்களா’, இந்தியில் ‘பங்கால்’ என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இந்தபோதிலும் அது நிறைவேற்றப்படாத நிலையில், நேற்று மீண்டும் சட்டமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a comment