நல்லூர் கந்தனின் வருடாந்த வருமானம் ஒரு கோடியே 37 லட்சம்

2900 0

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லுர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த வருமானம் ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

ஆணையாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு நல்லூர் பெருந் திருவிழாக் காலத்தில் கடைகள், விளம்பரப் பதாகை, சித்த மருத்து விற்பனை, சஞ்சிகை விற்பனை சேதன உர விற்பனை, நன்கொடை ஆகியவற்றின் மூலம் மாநகர சபைக்கு 20,580,880,94 மொத்த வருமானமாக் கிடைத்துள்ளது..

வழங்குப் பொருட்கள் ,பயன்பாட்டுச் செலவுகளுக்கான கொடுப்பனவு உட்பட மேலதிக நேரக் கொடுப்பனவு உட்பட மொத்தமாக 68 லட்சத்து 37 ஆயிரத்து 717 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

செலவிலும் கூடிய லாபமாக ஒரு கோடியே 37 லட்சத்து 43 ஆயிரத்து 163 ரூபா கிடைத்துள்ளது.

உற்சவத்தின் போது வெளிவீதி கண்காணிப்பிற்காக 1,360,092 ரூபாவுக்குச் சி.சி.ரீ.வி கமரா கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது இவ் வருடம் 1,290,205.14 ஆள் வருமானம் அதிகாரித்துக் காணப்படுகின்றது.

இது சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 6.7 வீதம் அதிகரித்துள்ளது செலவானது 719,559.15 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 9.5 விதத்தால் செலவு குறைவடைந்துள்ளது..

கிடைத்த வருமானம் லாபம் நகர அபிவிருத்திக்கும் இதர சேவைகளுக்கும் பயன்படத்தப்படவுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment