சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை புதிய உலக சாதனை

356 0

201608161315103753_Rio-2016-Poland-Anita-Wlodarczyk-hurls-hammer-world-record_SECVPFபெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.அனிட்டா விலோடர்ரைக் 82.29 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார். அவரது முந்தைய சாதனை 81.08 மீட்டராக இருந்தது.
அனிட்டா விலோடர்ரைக் மட்டும் தான் உலக அளவில் 80 மீட்டருக்கும் அதிகமான தூரம் எறிந்துள்ளார். இந்த சாதனை மூலம் பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் சிறந்த வீரர் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்.இவர் கடந்த 2009 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார். 2012-ம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

சீனாவை சேர்ந்த ஜங் 76.75 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கம் தட்டிச் சென்றார். அதேபோல், இங்கிலாந்து வீராங்கனை ஹிட்சான் 74.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.