காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் 

284 0

காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் உரிய பதிலை வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்திருந்தனர்.

அந்த மக்கள் 200 தினங்களுக்கு மேலாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர், அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் பதில் கூற வேண்டும் என்று தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 5 தாய்மார்கள் தீர்வு தெரியாமலேயே மரணித்திருப்பதாகவும் அவர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment