சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை உயரிய தன்மையில் இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் 151 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதானது, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சமாந்தரமாக இருக்க வேண்டும்.
முன்னொரு காலத்தில் அவ்வாறானதொரு நிலைமை இருந்ததாகவும், பின்னர் அது இல்லாமல் போனதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முழுமையாக தடுப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

