கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் சிலர் இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தமது அணியின் அரசாங்கத்தில் விரைவில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக சகோதரமொழி பத்திரிக்கை ஒன்றுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தம்முடன் கலந்துரையாடியதாகவும். அவ்வாறு கலந்துரையாடிய சிலர் அரசுடன் இணையும் கூட்டணியில் தன்னையும் இணைத்து கணக்கு பார்ப்பது தொடர்பில் தன்னால் எதுவும் கூறமுடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

