பொது மக்களுக்கான அவதான எச்சரிக்கை!

883 0

நிலவும் மழையுடான காலநிலை காரணமாக குகுலெ கங்கையின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அகலவத்த, வலல்லாவிட, பாலிந்தநுவர, இங்கரிய மற்றும் பதரலிய பிரதேசத்தில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே இரத்தினபுரி -எஹலியகொடை பிரதேசங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவத்தின் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சியுடான கடுமையான மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் மழை பொழிய கூடும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.இதனிடையே, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிக மழையுடனான காலநிலை காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதற்கிடையில், இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அவதான அச்சரிக்கை இன்று பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment