“சரத் பொன்சேகா ஒரு பைத்தியக்காரன்” – நாடாளுமன்றில் வீரவன்ச ஆவேசம்

219 0

அமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஜெனரல் ஜயசூரிய மீது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தினேஸ் குணவர்த்தன கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இததையடுத்து, நடந்த விவாதத்தில் ஆவேசமாக உரையாற்றிய விமல் வீரவன்ச,

“ அமைச்சர் சரத் பொன்சேகா என்ன பைத்தியமா? முன்னாள் இராணுவ ஜெனரல் ஒருவர் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டுவது ஒன்றும் சிறிய விடயமல்ல. அவர் ஒரு பைத்தியக்காரன்” என்று கூறினார்.

Leave a comment