மியான்மர்: பிரதமர் மோடி ஆங் சான் சூகியுடன சந்திப்பு

288 0

மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.

மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கியை இன்று சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படையினர் அளித்த மரியாதையை மோடி ஏற்றுக்கொண்டார். மியான்மரில் நாளை வரை பிரதமர் மோடி தங்குகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்தியாவில் உரிய அனுமதியின்றி தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.

இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment