இந்தியா வடமாகாண தமிழ் மக்களுக்கு வழங்கும்; உதவிகளை நிறுத்தப் போவதில்லை யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன்

488 0

DSC_0054இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராயன் இப்பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வில் தலமைதாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்:-
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவில் வடமாகாணத்தில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பல வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தற்போதும் இங்கு பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பிட்டுச் செல்ல வேண்டுமென்றால் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம் ஆலையத்தில் புணரமைப்பு வேலைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் புணரமைப்பு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு அடுத்த அவருட ஆரம்பித்தில் அவ்வாலையத்தின் கும்பாவிசேகம் நடாத்தப்படும்.
யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான கலாசார மண்டபம் அமைக்கவுள்ளோம். அக் கலாசார மண்டபம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த வாரும் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
குறிப்பாக இதற்கு முன்னால் கடற்றொழில் செய்பவர்களுக்கான உதவிகளையும் செய்து வந்திருந்தோம். இதனடிப்படையில் முல்லைத்தீவில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு படகுகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி இந்தியாவின் தமிழகத்தில் இருந்து பரதநாட்டியம் குழு ஒன்று இங்கு வரவளைக்கப்பட்டவுள்ளது.
இங்கு வரும் இப் பரதநாட்டியக் குழுவினர் யாழ்.சங்கிலியன் பூங்காவில் தமது நடன நிகழ்வுகளை ஆற்றவுள்ளனர்.
இதுவரை காலமும் இந்தியாவில் இருந்து வருகின்ற கலைஞர்கள் நல்லூர் சுழலிலும், மற்றும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளிலும் தமது நிக்வுகளை நடாத்தி வந்திருந்தனர்.
ஆனால் இம்முறை வருகைதரும் அவர்கள் தீவுகளிலும் நிக்வுகளிலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டள்ளது. இந்நிலையில் செம்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி நெடுந்தீவிலும் அந் நிகழ்வு நடாத்தப்படும் என்றாரர்.