இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது என நாம் 1987ம் ஆண்டிலேயே கூறியிருந்தோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் முதலாவது தமிழ. எதிர்க் கட்சித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நினைவில் கலந்து கொண்டு பிரதம உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது என நாம் 1987ம் ஆண்டிலேயே கூறியிருந்தோம். அதாவது . இந்த அமிர் அண்ணையை நான்
முதல் சந்தித்தது 1950ல் தான் முதன் முதல் சட்டக்கல்லூரியிலே நான் அமிர் அண்ணையை சந்தித்தேன்.அப்போது நான் முதல் ஆண்டு அமிர் அண்ணை இறுதி ஆண்டு அப்போது தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டது. அதிலே அமிர் அண்ணை தலைவராகவும் நான்
உறுப்பினராகவும் இருந்தோம்.
இதேநேரம் 1949ல் தந்தை இலங்கை தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அந்தக் காலம் முதல் தமிழரசுக்கட்சிக்காக அமிர் உழைத்தார். இந்த நாட்டில் சமஸ்டி இருக்க வேண்டும் என தந்தையும் அமிரும் உறுதியாக இருந்தனர். வடக்கு கிழக்கில் சமஸ்டியை விழக்கி ஆதரவைப்பெற முயன்றனர். அண்ணை அமிரின் வரலாறும் அரசியலும் பின்னிப் பினைந்த்து 1952 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி இரு ஆசணம் மட்டுமே
வெற்றியீட்டியது அதில் ஒன்று வன்னியசிங்கம் இரண்டாவது என்.ஆர். இராசவரோதயம் ஆகியோர்.
அதன்படி அன்று சமஸ்டியை ஏற்க மக்களிடம்
உட்சாகம் இல்லை. இதேபோன்று 1929 ல் டொனமூர் முன் கண்டியில் இருந்து சென்று சமஸ்டியை கோரினர்.இருப்பினும் யாழ். இளைஞர் சங்கம் உட்பட பலர் சமஸ்டியை கோரவில்லை. இதனால் அன்று சமஸ்டிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் 1956 தேர்தலில் தமிழரசுக் கட்சி பாரிய வெற்றி . இதில் அமிர் அண்ணை வட்டுக்கோட்டையில் வெற்றி பெற்றார். அப்போது பாரிய சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட காலம்.இதன் பின் தமிழரின் எதிர்ப்பால் 1957ல் பண்டா செல்வா ஒப்பந்தம். செய்யப்பட்டது. இதில் வடக்கு ஒரு பிராந்தியம் கிழக்கு இரு பிராந்தியம் என்றும் இவை இணைந்த பகுதியென இருந்த்து. குடியேற்றம் பிராந்திய சபைகளிடமே ஒப்படைக கப்பட்டது. ஆனால் இன்று சிங்களத் தலைவர்கள் கூறுகின்றனர் இந்த ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் பிரச்சணை என்றோ தீர்த்திருக்கும் என்கின்றனர். அதில் மகிந்த , மைத்திரி உள்ளிட்டோரும் உள்ளடக்கம்.
ஒப்பந்த காலத்தில் சத்தியாக்கிரகம் இருந்து கிழிக்க வைத்தவர்களில். ஒரு குருவை
அண்மையில் நான் சந்தித்தேன் அப்போது அவர் கூறினார். நாம் பாரிய தவறை இழைத்து விட்டோம் என்றார். இதன் பின்பு 1961ல் சத்தியாக்கிரகம் நடாத்தினோம் சகல கச்சேரி முன் மறியல் செய்தோம் இவற்றில் அமிர்.
அண்ணையின் முக்கிய பங்கு இருந்த்து. இவ்வாறு இடம்பெற்ற போராட்டத்தினால்
சில வாரத்தில் கைது செய்யப்பட்டு இராணுவ முகாமில் அடைக்கப்பட்டோம். இதில் தந்தை
செல்வாவுடன் அமிர் அண்ணை துணைவியார் மங்கை , திருச்செல்வோம் , நான் உட்பட பனாங்கொடையில் உள்ள இராணுவ முகாமில் அடைக்கப்பட்டோம். பின் 1965ல் டட்லி செல்வா ஒப்பந்தம் இடம்பெற்றது. இதில் குடியேற்றமே முக்கிய விடயம் அந்த இடத்மில் காணியற்றவர்களிற்கு முதலாவதாகவும் இரண்டாவதாக
வடக்கு கிழக்கு தமிழர்களிற்கும் மூன்றாவதாக நாடுபூரா உள்ள தமிழர்களிற்கும் எனக் கூறப்பட்டிருந்த்தோடு நிர்வாக ரீதியில் தமிழ் மொழி முதன்மைப் படுத்தப்பட்டிருந்த்து.
அப்போது வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் அங்கு பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பேன உரித்துண்டு என ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது இவற்றை சிங்கள மக்களை ஏற்க வைக்க வேண்டும் எனஅமிர் அண்ணை பாரிய பங்காற்றினார். 1972 ல் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. அப்போது எமது சார்பில் தர்மலிங்கம் பணியாற்றினார் சுயாட்சி , பிராந்திய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அப்போது அரசியல் அமைச்சர் கொல்வின் ஆர் டி சில்வா இருந்தார். தேர்தலில் போட்டியிட்டு அரசியலைப்பை மக்கள் ஏற்றதாக நிரூபிக்க வேண்டும் எனக்கோரினார். அது மட்டுமன்றி தந்தை செல்வா பதவி விலகி இடைத்தேர்தல் மீண்டும் இடம்பெற்றது. அதில் அமோக வெற்றியீட்டினார். பின் 1976ல் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேறியது. இதில் எமது இறமையை பெற உரித்துண்டு என நிரூபிக்கப்பட்டு உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் தீர்வை கானாது விட்டால் வெளியக சுயநிர்ணய அடிப்படையில் எமது உரிமையை பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது 18பேர் வெற்றியீட்டினோம்.
1972ல் யாப்பில் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமை வழங்கியிருந்தால் 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் இருந்திருக்காது. நாம் தனிநாடு கேட்டோம் 1976ன் பின் உலகத் தலைவர்களைச் சந்தித்தோம் இந்திராக் காந்தியையும் சந்தித்தோம் அனைவருமே தனிநாட்டுக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். ஆனால் நியாயமான உரிமையோடு தீர்விற்கு உதவுவோம் என்றனர். சர்வதேச ஆதரவு இன்மையால் அத் தீர்மானத்தை முன்னெடுக்கலாமா எனச் சிந்தித்தோம். இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். 1981ல் ஜே.ஆர். மாவட்ட அபிவிருத்தி சபையை நிறைவேற்றி தேர்தல் நடாத்தினார்.
மக்கள் ஆதரவு உண்டு என்பதனை நிரூபிக்க போட்டியிட்டு வடக்கு கிழக்கின் சகல மாவட்ட சபையை கைப்பற்றினோம். (அம்பாறை தவிர்ந்து) . ஒன்றை நிரூபித்தோம் எப்போதும் சமாதானமாக இப் பிரச்சணையை தீர்க்க தயார் என நிரூபித்தோம். தமிழீழத்தை கோரிய பின்பும் மாவட்ட சபையில் போட்டியிட்டு நியாயமான சமாதானத்திற்கு வர தயார் என உலகிற்கு நிரூபித்தோம். ஆயுதபோராட்டத்தை ஏற்கும் நிலமை இருந்த்து. இளைஞர்கள் ஏமாற்றப்பட்டிருந்தனர்.
தலைவர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றப்படுவதனால் வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்தனர் 83ல் இணக் கலவரம் ஏற்பட்டது. யாழ் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டது. அப்போது நாம் மன்னாரில் இருந்தோம். அப்போது ஓர் தகவல் அந்த வீட்டையும் தாக்க திட்டம் என்றனர். அதனால் பிரிந்திருந்தோம். அப்போது இந்திராக் காந்தியை சந்தித்து நிலமையை கூறினோம். இந்தியாவின் நல்லிணக்கத்தை ஏற்குமாறு ஜேஆருக்கு அம்மையார் தூது அனுப்பினார். அதனை ஜே. ஆர் ஏற்றார். கோபாலசாமி. பார்த்தசாரதி ஆகியோர் விசேட தூதுவராக நியமிக்கப்பட்டார்கள்
1983-08-26அன்று அவர்கள் வந்தனர். அப்போது நானும் அமிர் அண்ணையும் இந்தியாவில் இருந்து வந்தோம்.
அனைவரும் கொழும்பிற்கு வந்தோம் அது பயங்கரக் காலம் . பார்த்த சாரதி ஜே.ஆருடன் பேசினார். மாவட்டசபைத் தேர்தலை நடாத்த தயார் என்றார். ஜே. ஆர் அம்மையார் அது போதாது வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை வேண்டும். என்று கூறியிருந்தார். பின் மீண்டும் இந்தியா 1983 ல் 9 ம் மாதம் இந்திராக் காந்தியை சந்தித்தோம் ஒண்டை முக்கால் மடி நேரம் அலெக்சாண்டர், பார்த்த சாரதி , இந்திரா காந்தி , நான், அமிர் அண்ணை ஆகியோர் கலந்து கொண்டோம்.
அதிலே அம்மையார் தெளிவாக கூறினார் போதிய சுயாட்சி வழங்கப்படவேண்டும் எனக்கு உங்கள் தலைவர்களில் நம்பிக்கையில்லை ஜே.ஆரை நம்பவில்லை. உங்கள் கருமத்தில் எங்கள் நண்பர்கூட நேர்மையாக நடப்பார் என்று நான் நம்பவில்லை. என்றார். ஜே.ஆர் டில்லிக்கு நவம்பரில் வந்தார். அவருடன் இந்திராக் காந்தி பேசினார். இவற்றின் அடிப்படையில் . 1984ல் சர்வ கட்சி மாநாடு கொழும்பில் கூட்டப்பட்டது இவை அணைத்திலுமே அமிர்தலிங்கம் பாரிய பங்காற்றினார். ஜனவரியில் கூடி மார்கழி வரை இடம்பெற்றது . ஆனால் 1984-10-24ல் இந்திராக் காந்தி கொலை செய்யப்பட்டார். இதனால் எவ்விதமான திருப்திகரமான முடிவும் எட்டவில்லை.
மரணச் சடங்கு சென்று ராஜீவையும் சந்தித்தோம். அவர் சொன்னார் தாயாரின் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று அன்றும் பல தடவையும் கூறி தமிழ் மக்களை கைவிடேன் என்றார். அதனால் திம்புவில் பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. அதில் கூட்டணி , இயக்கங்கள் சார்பில் புலி , ஈரோஸ் , ஈ.பி.ஆர்.எல்.எவ், புளட் , ரெலோ ஆகியோர் எமது தீர்வை வலியுறுத்தினோம். தனி இனம் , வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் , சுய நிர்ணய உரிமை , இலங்கை அனைவருக்கும் அடிப்படை உரிமை கோரினோம் ஒரு முடிவும் எட்டவில்லை. பிரச்சணை தொடர்ந்த்து. 1986 ஆரம்பத்தில் ராஜீவின் விசேட தூதுவர்களாக நடவர் சிங் , சிதம்பரம் வந்தனர். அதில்
கூட்டணிக்கும் அரசிற்கும் இடையில் பேச்சு இடம்பெற்றது. அதுவே 13ன் ஆரம்ப பேச்சு அரசு தரப்பில் ரொனி டீமெல் , ரணில் , அமிர் , சிவசிநம்பரம் ,ஆனந்தசங்கரி , நான் ,ஜோசப் பர்ராஜசிங்கம் போன்ற பலர் இருந்தோம் பல நாட்கள் இடம்பெற்றது. இதில் அமிர் பாரிய பங்காற்றினார். அதிலேயே மாகாணசபைக்கு இணக்கம் காணப்பட்டது.
முதன் முதலில் அரசு மாவட்ட சபையை தாண்டி மாகாண சபைக்கு முன்வந்தனர். இதில்இந்தியாவின் அக்கறைக்கு அமீரின் பங்கு முக்கியம்.
இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது என அன்றே
நாம்கூறியிருந்தோம். 1987ல்.வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் பாரிய பிரச்சணை இருந்தது. கிழக்கை தமிழ் மாகாணம் , முஸ்லீம் மாகாணம் , சிங்கள மாகாணம் என பிரிக்கவே
அரசு முயன்றது. முறியடிக்க ராஜீவை சந்தித்து கோரிக்கை விட்டோம் . அந்த சந்திப்பில்
10 நாள் சந்திக்க முடியாது என்றனர். பின்னர் அழைப்பு வந்த்து. அமிர் , சிவசிதம்பரம் , நான் மூவரும் ராஜீவ்வுடன் இணைப்பு தொடர்பில் பேசினோம். ஜே. ஆர் . மொழியை கூறினார். என்றார். நாம் அப்போது திருமலை தொடர்பில் விளக்கி ஏற்றுக்கொள்ள வைத்தோம்.
விடைபெறும்போது நான் கூறினேன் நாம் கூறிய அனைத்தும் உண்மை என்றேன். உடன் ரமேஸ் பண்டாரியை சந்தியுங்கள் என்றார். அதன் வழியிலேயே இணைப்பு ஏற்பட்டது. 1987-09-27 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. 28.ல் மீண்டும் சந்தித்தோம். ஒப்பந்த்த்தில் இணைக்கப்பட்டபோதும் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தக் கூடாது என கடிதம் வழங்கினோம். ஜே.ஆரின் நெரிக்கடியால் சேர்க்கப்பட்டது வாக்கெடுப்பு நடக்காது என்றார். வாக்கெடுப்பிற்கு முன்னர்வெளியில் சென்ற அனைவரும் திரும்பிய பின்பு வாக்களிக்க வேண்டும் .ஜனாதிபதி பிற்போடலாம் , என இருந்த விடயம் மகிந்த வரை பிற்போடப்பட்டது.
இலங்கையில் வாழும் அனைவருக்கும் தனிக் கலாச்சாரம் உண்டு, வடக கு கிழக்கில் சரித்திர ரீதியல் தமிழர்கள் வாழ்ந்த பகுதி இணைத்து ஒரு மாநிலமாக வேண்டும் எனக் கூறப்பட்டது. இவ்வாறே அமிர்தலிங்கம் போன்றோர் பாடுபட்டனர். இந்த ஒப்பந்த்த்தின் பின்னர்
கொழும்பில் செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதில் ஜே.ஆர்ராஜீவ் பங்கு கொண்டனர். சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும்போது என்ன நிலை என ராஜீவ்விடம் கேட்க அதனை எதிர்ப்பேன் என ராஜீவ் அன்றே கூறினார். துரதிஸ்ட வசமாக ராஜீவ் கொலை செய்யப்பட்டார். 13ம் திருத்த
அரசியல் திருத்தம் மேற்கொள்ள முயன்றபோது எதிர்த்தோம். 12 விடயத்தை திரித்துவதாக ஜே.ஆர் எழுத்தில் வாக்குறு அளித்தார். நடவர்சிங் , குர்சித் போன்றோர்
எம்மை சந்தித்தார். குர்சித் சொன்னார் அதை எழுத்தில் பெற்றுள்ளோம் என்றார். பின் எமது இளைஞர்களிற்கும் இந்தியாவிற்கும் இடையில் யுத்தம் மூண்டது. பின்னர்
இளகஞர்கள் பிரேமதாச பேச்சு ஏற்பட்டது
அதன் மூலம் இந்தியாவின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டது. கட்டுப்படுத்தப்பட்டது. மாகாண சபையை வரவேற்றோம் ஆனால் அதனை நாம் தீர்வாக முடியாது எனவும் தெரிவித்தோம். அன்று வேறு முடிவை எடுக்க முடியாது . முதலாவது தேர்தலில் நாம் பஙகு கொள்ளவில்லை.
இவற்றில் இருந்து ஒன்று தெளிவு தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு அமிரால் தொடரப்பட்ட பாதை மிக கடினமாக இருந்த்து. தமிழர் சார்பில் உறுதியாக செயல்பட்ட கட்சியாக இருந்த்தன் நிமித்தம் ஓர் நியாயமான பாதையில் பயணித்தோம். அது இப்போதும் தொடர்கின்றது. என்றார்

