பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சித்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்

226 0

நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தினையடுத்து பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சித்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இந்தியாவின் முதலாவது பெண் பாதுகாப்பு அமைச்சராக அவர் நியமனம் பெற்றுள்ளார்.

இந்திய இராஜ்ய சபையின் உறுப்பினராக செயற்பட்ட 58 வயதான மதுரையை சேர்ந்த நிர்மலா சித்தாராமன், இன்று முதல் மத்திய அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதுதவிர 9 புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய இரு தொடரூந்து விபத்துக்களை அடுத்து தொடரூந்து அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறியுள்ள சுரேஸ் பிரபுவுக்கு (ளுரசநளா Pசயடிhர) பதிலாக பியூஸ் கோயால் (Pலைரளா புழலயட)நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Leave a comment