அடுத்த வருட நிறைவிற்கு முன்னர் அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும்- பிரதமர்

2770 55

அடுத்த வருட நிறைவிற்கு முன்னர் அனைத்து மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒரே தினத்தில் நடத்தி நிறைவுசெய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

எளிய பெரும்பான்மை முறையில் தேர்தல் நடத்தப்படுகின்றமையால் அநீதி இழைக்கப்படுவதன் காரணமாகவே விகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

விகிதாசார தேர்தல் முறையின் கீழான தேர்தல்களில் பாரிய அளவில் மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதன் காரணமாக கலப்பு முறையிலான நியாயமான தேர்தல் முறையொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் ஆலோசித்தது.

இதன் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment