திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ஊழியர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இன்று அதிகாலை (02) 04.00 மணியளவில், தேயிலைத் தூள் அரைக்கும் பகுதியிலிருந்தே திடீரென தீ பரவியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அப் பகுதி மக்களுடன் இணைந்து, பொலிஸார் சுமார் 30 நிமிடங்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப் பரவலால் தேயிலை தொழிற்சாலை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், அங்கு கடமையில் இருந்த ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

