அமெரிக்காவை குறிவைத்து தாக்கும் வல்லமையை வட கொரியாவுக்கு உள்ளது – பிரான்ஸ்

454 0

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தாக்கும் வல்லமையை வட கொரியா, தற்போது கொண்டுள்ளதாக பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-யூவ்ஸ் லீ ட்ரெயின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான அணு ஆயுத பரிசோதனைகள் பெரும் பாரதூரமான விடயமாகும்.

எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் உடனடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமே பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தீர்க்க முடியும் என்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜப்பானுக்கு மேலாக வட கொரியா ‘ஹவன்சோங் 12’ ரக ஏவுகணை ஒன்றை பிரயோகித்திருந்தது.

வடகொரியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை பரீட்சையினை கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, சகல ஏவுகணை தாக்குதல்களையும் வடகொரியா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment