இலங்கைக்குள் வெளிநாட்டு இராணுவ முகாம் அமைக்கப்படாது-பிரதமர்

450 0

இலங்கைக்குள் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ முகாமும் அமைக்கப்படாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் துறைமுகம் மற்றும் விமானநிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக கடற்படையினர் செயற்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இரண்டாவது இந்திய கடற்பாதுகாப்பு மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழுள்ள அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினருடன் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்துக்கொள்ளவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும் எமது இராணுவத்தினர் நட்புறவு நாடுகளுடன் இராணுவ பயிற்சி வேலைத்திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயிற்சிகளில் ஈடுவடுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment