ஜாம்பியா உக்ரையன் நாடுகள் புதிய கடற்படை தளபதிக்கு அழைப்பு

391 0

இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல்டிராவிஸ் சின்னாய்யாவை தங்களின் நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜாம்பியா மற்றும் உக்ரையன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. 

கொழும்பில் இடம்பெற்ற இராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்ட மேற்குறித்த நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் புதிய கடற்படைத் தளபதியை சந்தித்து இந்த அழைப்பை விடுத்துள்ளனா்.

நேற்று (31) கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாய்யாவைச் ஜாம்பிய இராணுவத்தின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பால்ஹியோவ சந்தித்தார்.

இதன்போது, இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்தியாவில் உக்ரேனின் தூதரகத்தில் பாதுகாப்பு மற்றும் கடற்படை, விமான படை பொறுப்பதிகாரியான கேணல் ஓலே ஹுலக் நேற்று கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாய்யாவை சந்தித்துள்ளார்

இதன்போது, இலங்கை கடற்படையின் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், தனது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a comment