கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற வாலிபர் ஒன்று கூடல்

386 0

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் 2017ம் ஆண்டின் வாலிபர் ஒன்று கூடல் இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஆரம்பமாக குறித்த வாலிபர் ஒன்று கூடலில் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் 150 மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டனர். “பெலன் தரும் கிறிஸ்து” எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற குறித்த வாலிபர் ஒன்று கூடல் தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் அனுசரணையில் இடம்பெற்றது. தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண கலாநிதி டானியல் செ.தியாகராஜா அவர்களின் ஆலோசணைக்கமைய யாழ் ஆதினத்தின் வாலிபர் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் வண பிதா ஜோன் லிஙஜகேஸ்வரன் அவர்களின் வழிநடத்தலில் கொழும்பு திருச்சபை வாலிபர்களால் நடார்த்தப்பட்டது,

குறித்த வாலிபர் ஒன்று கூடலில், ஆலோசணைகள், வேதாகம படிப்புக்கள், விளையாட்டுக்கள், குழு செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வொன்று கூடலில் யாழ் பேராயர், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி திருமண்டலத்தின் சிறுவர் ஊழியத்தின் பாரியநண்பர் குழுவின் செயலாளர் வண ஸ்ரேல் ஆகியோர் ஆலோசணை செய்திகளை வழங்கினர்.

கொழும்பு திருச்சபை ஊழியன் வண.பத்மதயாளன், கிளிநொச்சி முல்லைத்தீவு குருமுதல்வர்கள், திருச்சபை குருவானவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் ஒன்று கூடலில் கலந்து கொண்ட னைத்து வாலிபர்களிற்கும் பல்வுறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், பேராஜரின் ஆசியுடன் ஒன்று கூடல் நிறைவுக்கு வந்தது, அண்மை காலமாக நாட்டில் வாள்வெட்டு, புாதைப்பொரு் பாவணை உள்ளிட்ட பல மோசமான நிலைகளில் இளம் சமூகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு திருச்சபைகள் ஊடாக ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து வாலிப பருவத்தினை நல்ல மறையில் கட்டியெழுப்பும் பட்சத்தில் நல்லதொரு சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என பேராயர் அதி வண கலாநிதி டானியல் செ. தியாகராஜா நம்பிக்கை தெரிவிக்கின்றார்.

Leave a comment