ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்பில் தகவல் வழங்க தயார் – சரத்

551 14

ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான சட்டரீதியான விசாரணைகளில் தகவல்களை வெளிப்படுத்த தயாராக உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இது குறித்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

புதிய பாதுகாப்பு துறையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன மற்றும் புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஆதாரங்களை வழங்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment