16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவர் கைது!

234 0

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று இரவு யூ.எல்.196 ரக விமானத்தில் இந்நாட்டிற்கு வந்துள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

23 இலட்சத்து 13ஆயிரத்து 503 ரூபாய் பெறுமதியான குறித்த கருத்தடை மாத்திரைகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர் இரண்டு இலட்சம் ரூபாய் அபராதத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment