விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள தயார் -இலங்கை இராணுவம் 

325 0

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்த அனுபவத்தை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இடம்பெற்ற விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை 2009ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் நிறைவு செய்தது.

இதன்மூலம் தமது கடமையை நிறைவேற்றியுள்ள இராணுவம், தமது அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் இடம்பெறும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில், வெளிநாடுகளைச் சேர்ந்த 15 வளவாளர்களும், 12 உள்நாட்டு வளவாளர்குளும் சிறப்புரைகளை நிகழ்த்துகின்றனர்.

அத்துடன் இதில் சுமார் 800 பேர் வரையில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment