யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

497 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 61 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்றைய தினம் மாலை நான்கு மணிக்கு யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.சமநேரத்தில் Essen நகரத்திலும் மாவீரர் தூபி அமைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறுமிகளை நினைவில் ஏந்தி மலர் தூவி சுடர் ஏற்றி வணங்கினர்.

IMG_4199 IMG_4198 IMG_4192 IMG_4184

பேர்லின் நகரத்தில் பிரசித்திபெற்ற Brandenburger Tor மற்றும் யேர்மன் பாராளுமன்றம் ,அமெரிக்கா,பிரித்தானியா , பிரான்ஸ் நாடுகளின் தூதரகங்கள் அமைந்திருக்கும் மையத்தில் செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுமிகளை நினைவில் நிறுத்தி மாதிரி கல்லறைகள் வைக்கப்பட்டு , ஈன இரக்கமற்ற
சிங்கள பேரினவாத அரசின் படுகொலையை வெளிப்படுத்தும் முகமாக பதாதையை ஏந்தியவாறு இளையோர்களால் ஆங்கில மற்றும் யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் பல்லின மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அத்தோடு செஞ்சோலை படுகொலையை பற்றிய சிறிய தொகுப்பு யேர்மன் மொழியில் ஒலிபரப்பப்பட்டது.

IMG_9636 IMG_9626 IMG_9624 IMG_9605 IMG_9606 IMG_9612 IMG_9623 IMG_9600 IMG_9594 IMG_9593 - Kopie IMG_9550 - Kopie IMG_9538 FullSizeRender