ஐ.தே.க.யில் மீண்டும் திஸ்ஸ அத்தநாயக்க

321 0

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒர் உறுப்பினராக இருந்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கெலிஓய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனக்கு அரசியல் ரீதியில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு இன்னும் அவகாசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கினேன் என்ற காரணத்துக்காக தன்னை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் தள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment