திரைப்படம் இப்பொழுதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது, சட்டப்பேரவையில்தான் கிளைமாக்ஸ் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். சென்னை வந்துள்ள ஆளுநரை திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 10.30 மணியளவில் சந்திக்க உள்ளார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ள அதிமுக நிர்வாகிகள் பலரை நீக்கி தினகரன் நேற்று உத்தரவிட்டார். மேலும் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார்.
இந்நிலையில், திரைப்படம் இப்பொழுதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது சட்டப்பேரவையில்தான் கிளைமாக்ஸ் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று கூறினார்.
இதனிடையே, சசிகலா, தினகரனை நீக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று சக்திவேல் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். மேலும்,
தினகரன் அறிவிப்பது எதுவும் செல்லாது; தொண்டர்களே ஏற்றுக்கொள்ளாதபோது தினகரனின் நியமனங்களை எப்படி ஏற்பது என்று கேள்வி எழுப்பினார்.

