ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியுடனும் இணைந்து கொள்ளத் தயார் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி போட்டியிடும் என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த வேறு எந்தவொரு கட்சியும் தம்முடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதிகளை மீறி வருவதாகவும், இதன் ஓர் கட்டமாகவே தேர்தலை அரசாங்கம் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் எந்தக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கத்தை இலகுவில் தோற்கடிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

