வட இந்திய ஆன்மீக தலைவருக்கு தண்டனை – வன்முறையில் 23 பேர் பலி

255 0

வட இந்தியாவில் குர்மீற் ராம் ரஹீம் சிங் என அழைக்கப்படும் ஆன்மீக தலைவருக்கு நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கிய நிலையில், அவருக்கு ஆதரவாக குழுக்கள் மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது குறைந்த பட்சம் 23 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்கள் குர்மீற் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் என நம்பப்படுகிறது.

குர்மீற் ராமின் ஆதரவாளர்கள் சண்டிகார் அருகே பஞ்ச்குலா நகருரில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வாகனங்கள் வர்த்தக நிறுவனங்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

இந்த நிலையில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆன்மீக தலைவருக்கு எதிராக தீர்ப்புக்கு முன்னதாக ஒன்று கூடிய சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நகரில் ஒன்று கூடி, அவர் குற்றமற்றவர் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, வட இந்திய பாஞ்குல வில் ஆரம்பமான வன்செயல்கள் துரித கதியில் டெல்லி உட்பட பல நகரங்களுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, வன்முறையை கைவிட்டு அமைதிகாக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a comment