சிரியாவின் ராக்கா பிராந்தியத்தில் இடம்பெறும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அங்கு கடுமையான வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதியில் சுமார் 25 ஆயிரம் பொதுமக்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 250 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தாக்குதல்களை இடைநிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

