கொழும்பு குடிசை வாழ் மக்களுக்கான நிதிஒதுக்கீடு போதாது -அமைச்சர் பாட்டளி 

346 0

கொழும்பில் குடிசைகளில்; வாழும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு நகரில் 50 ஆயிரம் குடிசை வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2020 ஆண்;டாகும் போது அவற்றுள் 25 ஆயிரம் குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து கொடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் வாழும் மக்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும் இந்த வீடமைப்புகளுக்கு போதுமான நிதி வழங்கப்படுவதில்லை.

வடக்கிற்கு, கிழக்கிற்கு, மலையகத்திற்கு, கிராமத்திற்கு வீடுகளை வழங்குவது போன்று கொழும்பு நகரத்திற்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment