20ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் 

331 0

20ஆம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மகிந்த அணியினர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

20ஆம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் 3ல் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அரசாங்கம் இந்த திருத்தச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும்.

இந்த சட்ட மூலத்தை நியாயப்படுத்த அரசாங்கம் அடிப்படையற்ற காரணங்களை முன்வைத்து வருகிறது.

மக்களின் நலன்பொருட்டே இந்த சட்டமூலம் முன்வைக்கப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அது உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment