இரத்தினபுரி – றக்வான – படேயாய பிரதேசத்தில் இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டள்ளார்.
அவரது வீட்டில் வைத்தே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தாய் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், அவர் தந்தையுடன் தனித்து வசித்து வந்துள்ளார்.
நேற்று அவரது தந்தை வீட்டில் இல்லாத வேளையிலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

