யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது இல்லை என்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைகப்பெறுகின்ற இளைஞர்கள் சிலர், இந்திய சினிமாவின் தாக்கத்தால் இவ்வாறு நடந்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம் நடத்துகின்ற நிலையில், அதற்கு சமாந்தரமாக இவ்வாறான குழுக்கள் வன்முறைகளிலும் ஈடுகின்றன.
அதேநேரம் வெளிநாடுகளில் இயங்கும் சில அமைப்புகள், வடக்கில் அமைதியற்ற சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதையே விரும்புகின்றன.
இதற்காக அவர்கள் நிதி வழங்குகிறார்களா? என்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரே விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

