ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை முழுமையாக அமுலாக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆவணம் ஒன்று சர்வதேச மன்னிப்பு சபையினால், மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் போது, இலங்கை அரசாங்கம் ஜெனீவா பிரேரணை முழுமையாக அமுலாக்குவதற்கான அழுத்தத்தை பேரவை வழங்க வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரேரணையின் முழுமையான அமுலாக்கத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை ஐக்கிய நாடுகள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உண்மைகளைக் கண்டறிந்து நீதி வழங்குவதற்கானதும், மீளிடம்பெறாமையை உறுதி செய்வதற்கான தேசிய வேலைத்திட்டத்தை நடத்தவும், கண்காணிப்பு குழுவை உருவாக்கம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

