கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டத்துக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் ஆதரவு

228 0

முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி போன நிலையில் இன்று 177ஆவது நாளாகவும் மக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல்  முன்னெடுக்கும் மக்கள்  போராட்டம் இன்று 177 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்தவகையில் நேற்று(23) 176 ஆவது நாள் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் வருகைதந்து இவர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கியதோடு நல்லாட்சி அரசு இவர்களுக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நேற்று முன்தினம்(22) முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரண துங்க அவர்களை சந்தித்து கேப்பாபுலவு மக்கள் சிலர் கலந்துரையாடியதோடு நேற்று(23)இராணுவத்தளபதி உள்ளிட்டவர்களை சந்தித்தும் தாம் எதிர்பாத்த முடிவுகள் எவையும் எட்டப்படாது வழமை போன்று காலக்கேடுகளே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Leave a comment