சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

266 0

201608140735121597_Salem-private-parcel-agent-cbcid-police-Investigation_SECVPFசேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சேலம் தனியார் பார்சல் ஏஜெண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேற்கூரையில் துளைபோட்டு பணம் கொள்ளை போன வழக்கை கையில் எடுத்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான குழுவினர் சேலத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். பார்சல் அனுப்பும் ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணையும் நடத்தப்படுகிறது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரிசர்வ் வங்கிக்கு பண பெட்டிகளை பார்சல் அனுப்பும் ஒப்பந்ததை 10 ஆண்டுகளுக்கு பிரபல தனியார் பார்சல் நிறுவனம் பெற்றுள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் சேலம் ஏஜெண்ட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2 நாட்களாக ரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாக கூறப்படுகிறது.

சேலம் பார்சல் அலுவலகத்தில் வடமாநில ஊழியர்கள் 5 பேர் கடந்த மாதம் திடீரென்று வேலையில் இருந்து நின்றுள்ளனர். அவர்களுடைய செல்போன் எண்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் அனைவருடைய செல்போன் எண்களும் ஒரே மாதிரி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தன்று ரெயிலை ஓட்டிய டிரைவர் கோபாலகிருஷ்ணன், உதவி டிரைவர் ரகுபதி, எழும்பூர், சேலம், விருத்தாசலம் உள்பட ரெயில் நிலைய பார்சல் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட பலரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.