பார்சிலோனா தாக்குதல் – கனடாவை சேர்ந்த ஒருவர் பலி, 4 பேர் காயம் – பிரதமர் தகவல்

27299 207

ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் லாஸ் ராம்ப்லாஸ் சுற்றுலா தலம் அருகில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், பார்சிலோனா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சிக்கி, கனடாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா தாக்குதலில் கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஸ்பெயின் நாட்டுடன் நாங்களும் இணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment