யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும்……(காணொளி)

7420 0

யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் தெய்வீக சுகானுபவம்’ என்னும் வயலின் இசை நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும் இன்று வவுனியா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். இந்திய துணைத்தூதரகமானது, இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நிகழ்வை நடத்தியது.

இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரபல வயலின் இசைக் கலைஞர்களான மைசூர் கலாநிதி மஞ்சுநாத் மற்றும் நாகராஜ் சகோதரர்களின் வயலின் சிறப்பு இசை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் இ.இராதாகிருஷ்னண், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜன், மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் என பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது வட மாகாணத்தில் இசை பயிலும் விஷேடமாக வயலின் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,

வவுனியாவில் எதிர்வரும் காலங்களில் இந்திய துணைத்தூதரகத்தினால் தொடர்ச்சியான நிகழ்வுகள் நடத்தப்படும் என குறிப்பிட்டார்.
அத்துடன் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவது கடினமாக அமையும் என குறிப்பிட்டார்.

Leave a comment