ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழு நியமிக்கப்படவுள்ளது.

12590 54

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று இதனை அறிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலிலதா ஜெயராம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மரணமானார்.

எனினும் அவரது மறைவில் சந்தேகம் நிலவுவதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும என்றும் பல்வேறுப்பட்ட தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையிலே அது தொடர்பில் விசாரிப்பதற்காக விசாரணை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a comment