டெங்கு நுளப்பு பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருத்த 15 பேருக்கு எதிராக வழக்கு

473 0
ஹபரனை பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டையும் வீட்டுச் சூழலையும் வைத்திருந்த 15 பேருக்கு எதிராக வழக்குத் தொடர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள சுமார் 300 இற்கும் அதிகமான வீடுகள் நேற்றையதினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த 15 பேருக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை , கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று ஏற்படக்கூடிய வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சுகாதார பிரிவினர் இதனை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள் என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 815 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 585 பேர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment