மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் புத்தளத்துடன் இணைக்க நடவடிக்கை-இ.இரவீந்தீரன்

221 0

புத்தளத்தில் இயங்கும் மன்னார் மாவட்ட பாடசாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக புத்தளத்துடன் இணைக்கும் நடவடிக்கை விரைவு படுத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்தீரன் தெரிவித்தார்.

வடமாகணப் பாடசாலைகள் 6 புத்தளத்தில் இயங்கும் நிலையில் அதனை நிரந்தரமாக புத்தளத்துடன் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றபோதும் அதற்கான பணிகள் இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டப்படுவது தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் கல்வி வலயத்தின் கீழ் செயல்படும் பாடசாலைகளே தற்போது வரையில் புத்தளத்தில் இயங்குகின்றன. அவ்வாறு இயங்கும் பாடசாலைகளை மீளத் திரும்புமாறு பல தடவை கோரிக்கை விடுத்தார் திரும்பாத காரணத்தினால் அவர்களை நிரந்தரமாகவே புத்தளம் மாவட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாறு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக அப் பாடசாலைகளை வயம்ப மாகாண கல்வி அமைச்சின் கீழ் இணைக்க ஓர் இணக்கம் காணப்பட்டது. அவ்வாறு காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் அப் பாடசாலைகளையும் அங்கே கற்பித்தல் படியில் உள்ள ஆசிரியர்களையும் நிரந்தரமாகவே வயம்ப மாகாணத்துடன் இணைக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.

இருப்பினும் குறித்த பணிகள் இந்த ஆண்டின் ஒக்டோபர் மாத்த்திலேயே முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார். -குறித்த பாடசாலைகளில் மட்டும் சுமார் 160 ஆசிரியர்கள் படியாற்றுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Leave a comment