டெங்கு பெருகும் அபாயகரமான இடங்களை சுத்தம் செய்ய தவறிய கரைச்சி பிரதேச சபை

301 0

கிளிநொச்சியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படும் பகுதிகளை நீண்ட காலமாக சுத்தம் செய்ய தவறியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியிலிருந்து, இரணைமடு சந்திவரையான ஏ9 வீதியில் இவ்வாறு டெங்கு  நுளம்பு பெருக கூடிய நிலையில் குப்பைகூழங்கள் காணப்படுகின்றன. இவற்றை நீண்ட காலமாக கரைச்சி பிரதேசபையினர் அகற்றவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு காணப்படும் பகுதிகளை அண்டிய பகுதியில் அதிகளவான குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. கரைச்சி பிரதேச சபையினர் உடனடியாக செயற்பட்டு குறித்த பகுதிகளை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதேச மக்களின் கோரிக்கையாகும்.

Leave a comment