தாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும்போது ரெயில் பெட்டியில் துளை இல்லை

320 0

201608130857019730_Railroad-crossing-at-the-Tambaram-railway-station-and-not_SECVPFதாம்பரம் ரெயில் நிலையத்தை கடக்கும் போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் ரெயில் பெட்டியில் துளை இல்லாததால் எழும்பூரில் தான் கொள்ளை சம்பவம் நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் கொண்டு வரப்பட்ட வங்கி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி முக்கிய ஆதாரமாக எடுத்து கொள்ளப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த வீடியோ காட்சி தெளிவாக இல்லாததால் அதை தெளிவாக ஆக்கும் முயற்சியில் ரெயில்வே போலீசார் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். அந்த வீடியோவை தெளிவாக மாற்ற செகந்திராபாத்தில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.தற்போது அந்த வீடியோவில் பதிவான காட்சியில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட பார்சல் பெட்டியில் துளை இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

தாம்பரத்தை கடந்த அந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தபிறகு, சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.எனவே தாம்பரத்தை கடக்கும் போது பெட்டியில் துளை இல்லை என்றால், சேத்துப்பட்டு பணிமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தான் துளை போட்டு கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-சேலத்தில் இருந்து எழும்பூர் வந்த ரெயில் தாம்பரத்தை அதிகாலை 3.28 மணிக்கு கடந்துள்ளது. அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை முக்கிய ஆதாரமாக எடுத்து செகந்திராபாத்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பினோம்.

தற்போது அங்கிருந்து தெளிவான முடிவு வந்து இருக்கிறது. அதில் பதிவான காட்சியில், அந்த பெட்டியில் துளை இல்லை என்பது தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது. எனவே தாம்பரத்தை தாண்டி எழும்பூர் வந்த பிறகு தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

அதேபோல், கடந்த 9-ந்தேதி ரெயில் அதிகாலை 3.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து, பிறகு அதிகாலை 4.45 மணிக்கு சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர், காலை 8.10 மணிக்கு பார்சல் பெட்டி மட்டும் 2-வது நடைமேடைக்கு என்ஜின் உதவியுடன் கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டு, காலை 10.10 மணிக்கு மேல் தான் பார்சல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய நாளில் எழும்பூர் ரெயில் நிலையத்துக்குள் ரெயில் வந்த போது பதிவான காட்சியையும், அதன் பிறகு சேத்துப்பட்டு பணிமனையில் இருந்து பார்சல் பெட்டியை மட்டும் 2-வது பிளாட்பாரத்துக்கு கொண்டு வந்த போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியையும், இன்று (நேற்று) காலை அதே ரெயில் பெட்டியை கொண்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் பதிவான வீடியோ காட்சியையும், ஏற்கனவே வீடியோவை தெளிவாக மாற்றுவதற்கு அனுப்பிய அதே இடத்துக்கு அனுப்பி இருக்கிறோம்.

இந்த தகவல்களும் வந்தால் தான் கொள்ளை சம்பவம் எங்கு நடந்தது என்பதை தெளிவாக கூற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.