சமநிலையான அபிவிருத்தியை எற்படுத்துவதே பிரதான இலக்கு

199 0

கடந்த காலம் பூராகவும் காணப்பட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக கிராமங்களுக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான இலக்கு சமநிலையான அபிவிருத்தி என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார். 

தேசிய சேமிப்பு வங்கியின் NSB i Saver சேவையை விரிவாக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைரமையில் இன்று காலை கொழும்பிலுள்ள தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கம் எப்போதும் கிராமங்களின் பொருளாதாரம் குறித்து ஆர்வம் செலுத்துவதாகவும், 2015ம் ஆண்டு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரத்திற்கு வந்த தற்போதைய அரசாங்கம் நாட்டுக்கு ஒரே அளவான தொழில்நுட்பத்தை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த காலத்தில் நாட்டினுள் பொருளாதார ஏற்றத்தாழ்வு காணப்பட்ட தாகவும், அதன்படி உழைக்கும் வருமானங்களில் சுமார் நூற்றுக்கு 51 வீதமானவை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்ததுடன், மீதி 49 வீதமே ஏனைய 08 மாகாணங்களுக்கும் பிரிந்து சென்றிருந்ததாக அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் இந்த நிலமையை மாற்ற வேண்டி இருப்பதாகவும், அந்த வேலைகளை நிறைவேற்றும் போது பல்வேறு விமர்சனங்கள் எழுவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் கூறினார்.

Leave a comment