ஜேர்மனியில் இலங்கை பெண் அகதி கொலை – விசாரணை ஆரம்பம்

333 0
ஜேர்மனியில் இலங்கையைச் சேர்ந்த பெண் அகதி ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதானவரின் வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது.
22 வயதான சூபிகா பரமநாதன் என்ற குறித்தப் பெண், அவரது ஆண் நண்பர் என்று கூறப்படும் நைஜீரியாவைச் சேர்ந்த அகதி ஒருவரால் கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.

குறித்த இலங்கைப் பெண், ஜேர்மனியில் உள்ள அகதிகளுக்கான தொண்டுபணிகளியில் ஈடுபட்டு வந்தவராவார்.

அவர் ஜேர்மனியின் அஹோஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில், அவரை ‘அஹோசின் தேவதை’ என்று அந்த பகுதி மக்கள் அழைத்துவந்ததாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நைஜீரியருக்கும் அவருக்கும் இடையிலான உறவு முறிவை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம், குறித்தப்பெண்ணின் நண்பர் ஒருவரது இல்லத்துக்கு அருகில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை தொடர்பில் கைதாகியுள்ள நைஜீரியரான அந்தோனி ஐ. என்பவர் மோஎன்ஸ்டெர் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்பட்ட போது, நேற்றையதினம் பதில் எதனையும் அவர் வழங்கி இருக்கவில்லை.

இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பெரும்பாலும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment