டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக பண்புகளை மீறும் செயல்-ஜனநாயகப் போராளிகள் கட்சி

339 0

வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலககோருவது ஜனநாயகப் பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளகவே நாம் கருதுகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

வடமாகாண சபை அமைச்சர் டெனீஸவரன் பதவி விலகல் தொடர்பாக ஜனநாயப் போராளிகள் கட்சியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியற் பூசல்கள் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமமானது. பொறுப்புணர்வு இல்லாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவே நாம் நம்புகின்றோம்.

மக்களின் வாழ்வியல் பண்பாட்டியல் மற்றும் அரசியல் எழுச்சிக்கு வித்திடாமல் வெறும் அமைச்சரவைக்கான வாத பிரதிவாதங்களால் மிச்சமுள்ள காலத்தை கடத்த முதலமைச்சர் அடங்கிய வடமாகாணசபை முயற்சிப்பதானது மிகவும் கடுமையான யுத்தவிளைவுகளை எதிர்கொண்டு மீட்சி பெற முயற்சிக்கம் எமது இன்த்திற்கு எதிரான செயற்பாடாகவே கருதுகின்றோம்.

குறிப்பாக வடமாகாண அமைச்சர் பாலசிங்கம் டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பதானது ஜனநாய மற்றும் அதனடிப்டையிலான பொறிமுறைகள் மேல் கைவைப்பதற்கான முதலமைச்சரின் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதற்கு காரணமான சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றது

கடந்த கால செயற்பாடுகளில் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகொள்கின்றோம். அவருக்க எதிராக ஜனநாய விழுமியங்களை மீறி எடுக்கம் நடவடிக்கைகளை வண்மையாக கண்டிப்பதோடு அவரது தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு ஜனநாயப் போராளிகள் கட்சி தமது ஆதரவு நிலையினை தெரிவித்துக் கொள்கின்றது.

வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மக்களை அணிதிரட்டி ஜனநாயகத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்பங்களை எமக்கு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுநிற்கின்றோம் . சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதித்து வடமாகாண சபையும் அதன் தலைமைத்துவமும் பயணிக்குமா? என்ற நியாயப்பாடான சந்தேகம் எம்மிடம் உள்ளது.

மக்கள் பணியை நிறைவேற்றாத மாகாண சபையாக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான தனது முயற்சியில் வடக்கு முதல்வர் எடுத்தாற் கைப்பிள்ளை போல் செயற்படுகின்றமை ஜனநாயக முறைமைக்கு திரும்பியுள்ள எமக்கும் மக்களுக்கம் வருத்தமளிக்கின்றது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment