மடு மாதாவின் ஆவணித் திருவிழா

490 0

மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, நேற்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார்
மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடைந்தது. இதில், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியைப் பெற்றனர்.

இதன்போது மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment