மத்திய மாகாணத்தில் 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கு திசைமுகபடுத்தல்

244 0

மத்திய மாகாணத்தில் அண்மையில் புதிய நியமனம் பெற்ற 527 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 14 பயிற்சி நிலையங்களில் சேவை பயிற்சி (திசை முகபடுத்தல்) நடைபெற்றது. 

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரே தடவையில் மத்திய மாகாணத்தில் 723 தமிழ் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கிய பொழுதும் நியமனம் பெற்றவர்களில் 527 பட்டதாரிகளே கடமைகளை பொறுபேற்று உள்ளனர். மிகுதியான 196 பேரில் பெரும்பாலான முஸ்லிம் சகோதர பட்டதாரிகள் தங்கள் கடமைகளை பொறுபேற்கவில்லை.

காரணம் தங்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்கப்படவில்லை என்பதால் தற்போது இவர்களுக்கும் உரிய பாடசாலைகள் வழங்கி கடமைகளுக்கு இணைத்துக் கொள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது, நியமனம் பெற்று கடமையில் உள்ள 527 பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை பாடசாலைக்குச் சென்று முற்றாக மேற்கொள்ளவும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயிற்சிகள் வழங்கபட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக கம்பளை கல்வி வலையத்தின் கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.துஸ்யந்தி தலைமையில் 52 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சேவை பயிற்சி கம்பளை கல்வி வளையத்தில் நடைபெற்றது. அதன் ஒரு கட்டமாக பாடசாலை கல்வி சுற்றுலா புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் அதிபர் ஆர்.விஜேந்தரன் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடசாலையின் கட்டமைப்பு¸ நிர்வாகம்¸ ஆசிரியர் மனப்பாங்கு மாற்றம்¸ தலைமைத்தவம்¸ கற்பித்தல்¸ பாடக்குறிப்பு¸ நவீன கற்பித்தல் முறைமை¸ தொழில்நுட்ப பயன்பாடு¸ பாடசாலையின் வள பயன்பாடு¸ இணை பாடவிதான செயற்பாடுகள்¸ கவைத்திட்டம்¸ பாடசாலையின் சமூக தொடர்பாடு¸ கற்றல் கற்பித்தல் மேற்பார்வை போன்ற பல விடயங்களில் பயிற்சிகள் வழங்கபட்டன.

Leave a comment