அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்

348 0

இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். 

ஆனால், இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை.

இதை இனி அனுமதிக்க முடியாது. தமிழ் மொழி இப்படி கைவிடப்பட முடியாது. மும்மொழி மொழிச்சட்டம் மீறப்படவும் முடியாது. எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது.

இந்நோக்கில், இன்று இலங்கை முழுக்க உள்ள 882 அரச அலுவலகங்களிலிருந்து மூன்று மொழிகளிலும் இல்லாத முறையற்ற படிவங்களை நாம் பெற்று, அவற்றை மூன்று மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பிக்கிறோம். இதற்குள், 429 பிரதேச செயலக மற்றும் அதனுடன் இணைந்த அரச காரியாலயங்களும், 256 மாகாண மற்றும் பிரதேச சபை அலுவலகங்களும், 197 ஏனைய அலுவலகங்களும் இருக்கின்றன.

மொழிபெயர்த்த பிறகு புதிய மும்மொழி படிவங்கள் எனது அமைச்சினால் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அத்துடன் அந்த படிவங்களின் மென்பொருள் பதிவு செய்யப்பட்ட இறுவெட்டும் அந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a comment